Tuesday, May 29, 2018

HARRY POTTER ACTOR GETS MARRIED TO LONG TIME GIRLFRIEND

May 2018:

Matthew Lewis, one of the Actor who played the popular character Neville Longbottom in the massively successful Harry Potter series, has now gotten married to his long-time girlfriend Angela Jones.




A big surprise of his fans, he tweeted, "Not only did I miss @ArcticMonkeys in LA but they were performing in Italy at the same time we were there and my wife made me get married instead. Fuming."



Interestingly, it is reported that Angela worked at a Harry Potter theme park, and Matthew met her during the opening of the park. 

Sunday, May 27, 2018

Rima kallingal Wants to be CM of Tamilnadu

May 27/05/2018:

Rima Kalliingal open voice wish to act the Bio-Pic late CM of Tamil nadu Dr. J,Jayalitha



Jayalitha also versatile Actress & Strong Political leader in Tamil nadu,she was most talent actress who ruled the Tamil industry in Early 70's & 80's.Later he Also enter on to Political and she was Cm of Tamilnadu for 4 times.


She was passed in 2016 December,moreever Still controversy on her death, Rima like to Act the jayalitha bio-Pic.



Lately kreethi suresh acted in savathri Bio-pic,its was huge Success  in Tamil & Telugu Languages

நடிகை அமலாபாலுக்கு என்னானது, ஏன் திடீரென்று அழுகிறார்?

ரசிகர்களால் அதிகம் விரும்பப்பட்டவர் நடிகை அமலாபால்.
 இவரது நடிப்பில் பாஸ்கர் ஒரு ராஸ்கல் என்ற படம் வெளியாகி இருந்தது.
எப்போதுமே சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டீவாக இருக்கும் நடிகை அமலாபால்சமீபத்தில் ஒரு புகைப்படம் போட்டு ரசிகர்களுக்கு பதற்றத்தை கொடுத்துள்ளார்.
தான் அழுவது போல் ஒரு புகைப்படம் போட்டுள்ளார் அதை பார்த்த ரசிகர்கள் திடீரென்று உங்களுக்கு என்ன ஆனது என்று கமெண்ட் செய்து வருகின்றனர்


Kaala Unseen New Movie HD Still

Kaala Unseen New Movie HD Still















சென்னையில் படைப்பாளிகள் அறைகூவல்:

சென்னை: தூத்துக்குடி துப்பாக்கி சூடு விவகாரத்தில் வேறுபாடுகளை களைந்து அனைவரும் ஒன்று திரண்டு போராட வேண்டும் என்றும் ஒன்றுபட்ட போராட்டங்கள்தான் மாற்றங்களை கொண்டு வரும் என்றும் தமிழகத்தின் படைப்பாளிகள் அறைகூவல் விடுத்துள்ளனர்


தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 13 பேரை படுகொலை செய்த அரசைக் கண்டித்து நேற்று தமிழ்நாடு கலை இலக்கிய ஊடக செயற்பாட்டாளர்கள் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

பங்கேற்ற படைப்பாளிகள்:

இந்த ஆர்ப்பாட்டத்தில், எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யா, கவிஞர் சல்மா, அஜயன்பாலா., கவிஞர் யுகபாரதி, இயக்குனர்கள் எஸ்.பி. ஜனநாதன், ப.ரஞ்சித், பாலாஜி சக்தவேல், சசி, சீனுராமசாமி, கார்த்திக்சுப்புராஜ், ராம், பாண்டிராஜ், பிரம்மா, ராஜூ முருகன், தாமிரா, மீரா கதிரவன், மாரி செல்வராஜ், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், நடிகர்கள் கலையரசன், அசோக் செல்வன், சுந்தராஜன், வழக்கறிஞர் அருள்மொழி, பேரா.ஹாஜாகனி, செயற்பாட்டாளர் ஆளூர் ஷாநவாஸ், ஊடகவியலாளர்கள் அ.குமரேசன், ஆழி. செந்தில்நாதன், கவின்மலர், அருள் எழிலன், அதிஷா, டி.எஸ்.ஆர். சுபாஷ், அதிஷா, உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

4 கட்சிகளுமே காரணம்:


தமிழக அரசு மத்திய அரசுக்கு அடிபணிந்து உள்ளது. அடிமைகள் நம்மை ஆண்டு கொண்டிருக்கிறார்கள். சாதி இனம் பார்த்து மக்கள் வேட்டையாடப்படுகிறார்கள். தமிழ்மொழி மட்டும் பேசுவர்கள் மட்டும் தமிழர்கள் அல்ல. வேறுபாடுகளை களைந்து அனைவரும் ஒன்று திரண்டு போராட வேண்டும். ஒன்றுபட்ட போராட்டங்கள்தான மாற்றங்களை கொண்டு வரும்.இவ்வாறு அந்த போராட்டத்தில் பங்கெடுத்தவர்கள் தங்களது கருத்துக்களை பதிய வைத்தனர். முன்னதாக, போராட்ட களத்தில் கொல்லப்பட்டோருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. முழுவதும்

தூத்துக்குடியில் அமைதி திரும்பியது அனைத்து கடைகளும் திறக்கப்பட்டன

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டத்தின் போது ஏற்பட்ட வன்முறையில் 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தையடுத்து 5 நாட்களுக்குப் பிறகு தூத்துக்குடியில் போடப்பட்டிருந்த 144 தடை உத்தரவு நீக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாநகர பகுதியில் ஆங்காங்கே பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்களும் நடந்தன. இதன் காரணமாக தூத்துக்குடியில் கடந்த 4 நாட்களாக பஸ்கள் இயங்காததாலும், கடைகள் திறக்கப்படாததாலும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது..



இந்த நிலையில் 5-வது நாளான நேற்று காலை தூத்துக்குடியில் இருந்து நெல்லை, திருச்செந்தூர், மதுரை, கோவை உள்ளிட்ட வெளியூர்களுக்கு பஸ் போக்குவரத்து தொடங்கியது. நகர்ப்புறத்தில் ஒரு சில இடங்களை தவிர மற்ற பகுதிகளுக்கு பஸ்கள் இயக்கப்பட்டன. இதனால் பஸ்களில் பயணிகளின் கூட்டம் சற்று அதிகமாகவே காணப்பட்டது.


நேற்று (நேற்று முன்தினம்) பஸ் எரிப்பு சம்பவம் நடந்துள்ளது. இதுபோன்ற செயல்களில் யாரும் ஈடுபடக்கூடாது. பஸ்களுக்கு அனைத்து பாதுகாப்பும் மேற்கொள்ளப்படும். தவறான எண்ணத்துடன் யாரேனும் பஸ்களை நெருங்கி வந்தால், அதனை தடுப்பதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.




தூத்துக்குடியில் இணையதள சேவை வழங்குவது தொடர்பாக ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. விரைவில் இணையதள சேவை கிடைக்கும். தூத்துக்குடியில் நடந்த கலவரத்தில் இறந்த 7 பேரின் உடல்கள் மாஜிஸ்திரேட்டு முன்னிலையில் பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது. காயம் அடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் இருந்து டாக்டர்கள் வரவழைக்கப்பட்டு, சிகிச்சை அளித்து வருகிறார்கள்.


இந்த சம்பவத்தில் இதுவரை பாதிக்கப்பட்ட 52 பேருக்கு ரூ.1 கோடியே 4 லட்சம் நிவாரண உதவி வழங்கப்பட்டு உள்ளது. மீதம் உள்ளவர்களுக்கு விரைவில் வழங்கப்படும். கலவரத்தில் காணாமல் போனவர்கள் குறித்து மாவட்ட கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டை அணுகி புகார் தெரிவிக்கலாம். தூத்துக்குடியில் 100 சதவீதம் அமைதி திரும்பிய உடன் படிப்படியாக போலீசாரை திரும்ப பெற நடவடிக்கை எடுக்கப்படும்.







ஜெயலலிதா சிகிச்சையில் இருந்தபோது பேசிய கடைசி பேச்சு ஆடியோ

அப்பல்லோ மருத்துவமனையில்:

கடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பர் 22-ந்தேதி ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.அவர் கடைசி யாக பேசிய, 'ஆடியோ' பதிவு, விசாரணை கமிஷனில், நேற்று வெளியிடப்பட்டது.

அவ்வப்போது அவருக்கு மூச்சுத்திணறலும் ஏற்பட்டு வந்தது. மூச்சு விடும்போது ‘விசில்’ போன்ற சத்தமும் வந்துள்ளது. இதை ஜெயலலிதா தனக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் நரசிம்மனிடம் தெரிவித்துள்ளார்.அப்படியென்றால் விசில் போன்ற சத்தம் வரும்போது அதை செல்போனில் பதிவு செய்து வைத்துக்கொள்ளுங்கள், நான் சிகிச்சை அளிக்க வரும்போது அதை பார்த்து விட்டு உரிய சிகிச்சை அளிக்கிறேன் என்று கூறி உள்ளார்.மூச்சுவிடும்போது வெளிவரும் சத்தத்தை செல்போனில் பதிவு செய்துள்ளார். ஜெயலலிதா இருமியபடியே மெல்லிய குரலில் மருத்துவருடன் சில நொடிகள் பேசும் அவரது பேச்சு 2 ஆடியோவாக பதிவு செய்யப்பட்டுள்ளது.



அந்த ஆடியோவில் பதிவாகி உள்ள உரையாடல் வருமாறு:-


ஜெயலலிதா(தனக்கு அருகில் நிற்கும் மருத்துவரை பார்த்து):- என்ன பண்றீங்க...


மருத்துவர்:- ஒன்னுமில்ல மேடம். ரத்த சர்க்கரை அளவை பதிவு செய்கிறேன்.


ஜெயலலிதா:- கேட்குதா...(விசில் போன்ற சத்தம்).


மருத்துவர்:- இப்ப பெருசா இல்ல மேடம்...


ஜெயலலிதா (இருமிக்கொண்டே):- அப்ப இருந்தபோது கூப்பிட்டேன். அப்ப அதை எடுக்க முடியலன்னீங்க.


மருத்துவர்:- அப்ளிகேசனை டவுன் லோடு பண்ணிக்கிட்டு...(விசில் போன்ற சத்தத்தை பதிவு செய்வதற்கு ஆடியோ அப்ளிகேசனை மருத்துவர் டவுன்லோடு செய்து கொண்டிருந்ததாக கூற வருகிறார்)


ஜெயலலிதா:- எல்லாம் ஒன்னு கிடக்க ஒன்னு...


மருத்துவர்:- சரி...சரி...


ஜெயலலிதா:- இப்ப எடுக்க முடியலனா விடுங்க(ஜெயலலிதா கடுமையாக இருமுகிறார்)


மருத்துவர்:- சரி


ஜெயலலிதா(இருமிக்கொண்டே):-(பீப் பீப் என்ற சத்தம் தொடர்ந்து கேட்கிறது)நல்லா வருது வீய் வீய்னு உள்ள... தியேட்டரில் முதல் வரிசையில் விசில் அடிக்கிற மாதிரி இருக்கு. அடே... அம்மா...


செவிலியர்:- ஒன் பார்ட்டி(140) இருக்கு (சர்க்கரை அளவு)... ஹையா இருக்கு...


ஜெயலலிதா:- பை


செவிலியர்:- எய்ட்டி(80)


ஜெயலலிதா:- இட்ஸ் ஓகே பார் மீ. நார்மல்(இது எனக்கு சரியான அளவு தான்).

அதேவேளையில், இந்த ஆடியோவில் பதிவாகி உள்ள குரல் ஜெயலலிதாவின் குரல் தானா? என்பதை உரிய பரிசோதனை மூலம் கண்டறியவும் ஆணையம் முடிவு செய்துள்ளது.










Saturday, May 26, 2018

தூத்துக்குடியில் நீங்கியது விதிக்கப்பட்டிருந்த 144 தடை

தூத்துக்குடி:


தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி 100வது நாளன்று பெரிய அளவில் போராட்டம் நடத்தப்பட்டது. இந்த சம்பவத்தில் ஆட்சியர் அலுவலகம் நோக்கி நடந்த பேரணியின்பொழுது வழியில் வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. போராட்டத்தில் வன்முறையில் ஈடுபட்டவர்களை கலைக்க போலீசார் தடியடி நடத்தினர். கண்ணீர் புகைக்குண்டுகள் வீசினர்.




அங்கு போராட்டம் வன்முறையாக வெடித்தது. இந்த சம்பவத்தில் கலகக்காரர்களை அடக்க போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் 13 பேர் பலியாகினர். பலர் காயமடைந்தனர். 150க்கும் மேற்பட்டோர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.






இந்த சம்பவம் நாடெங்கும் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அசம்பாவிதங்களை தடுக்க மாவட்ட நிர்வாகம் கடந்த 21ம் தேதி இரவு 10 மணி முதல் 23ம் தேதி காலை 8 மணி வரை 144 தடை விதித்தது. பதற்றம் நிலவியதால் 144 தடை நீட்டிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தூத்துக்குடியில் 95 சதவீதம் இயல்பு நிலை திரும்பியுள்ளதால், 144 தடை உத்தரவு வாபஸ் பெறப்பட்டதாக ஆட்சியர் சந்தீப் நந்தூரி இன்று காலை அறிவித்துள்ளார்..தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட அனைத்து சட்டப்பூர்வ நடவடிக்கைகளை அரசு உறுதியாக எடுக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.






தூத்துக்குடி செல்கிறார் துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம்

தூத்துக்குடி:

துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் நாளை தூத்துக்குடி செல்லவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.அங்கு ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு பாதிக்கப்பட்டோரை அவர் சந்திக்கிறார்


தொடர்ந்து 100வது நாளன்று பெரிய அளவில் போராட்டம் நடத்தப்பட்டது. இதில் ஆட்சியர் அலுவலகம் நோக்கி நடந்த பேரணியானது வன்முறையாக வெடித்தது. இந்த சம்பவத்தில் கலகக்காரர்களை அடக்க போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் 13 பேர் பலியாகினர். பலர் காயமடைந்தனர். 150க்கும் மேற்பட்டோர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

இன்று காலை 8 மணியுடன் 144 தடை உத்தரவு வாபஸ் பெறப்பட்டது. இந்நிலையில் ஆளுங்கட்சியின் முதல் நபராக அமைச்சர் கடம்பூர் ராஜூ, தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.




இந்நிலையில் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் நாளை தூத்துக்குடி செல்கிறார். அங்கு ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தின்போது, பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்பின்னர் அவர் தூத்துக்குடிக்கு சென்று, ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு பாதிக்கப்பட்டோரை சந்திக்க இருக்கிறார்

சென்னை சூப்பர் கிங்ஸ் VS ஹைதராபாத்

கோப்பை யாருக்கு?

இன்றுடன் முடிகிறது ஐபிஎல் திருவிழா:

கடந்த ஏப்ரல் மாதம் 7ம் தேதி தொடங்கி ஒன்றரை மாதத்துக்கும் மேலாக நடந்துவந்த ஐபிஎல் தொடர், இன்றுடன் முடிவடைகிறது.

மும்பை வான்கடே மைதானத்தில் நடக்கும் இறுதி போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் பலப்பரீட்சை செய்கின்றன.

சென்னை சூப்பர் கிங்ஸ்:

ஏற்கனவே 2010, 2011–ம் ஆண்டுகளில் ஐ.பி.எல். பட்டத்தை ருசித்து இருக்கிறது. இரண்டு ஆண்டு கால தடை காலத்திற்கு பிறகு மறுபிரவேசம் செய்திருக்கும் சென்னை அணி, மீண்டும் தங்கள் பலத்தை நிரூபித்து நீண்ட கால ஏக்கத்தை தணிக்க வேண்டும் என்பதில் தீவிரம் காட்டுகிறது.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத்:

கேன் வில்லியம்சன் தலைமையிலான ஹைதராபாத் அணி, பவுலிங்கில் சிறந்த அணியாக திகழ்கிறது. டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களும் சிறப்பாக ஆடுகின்றனர். ஆனால், மிடில் ஆர்டர் தொடர்ச்சியாக சொதப்புகின்றனர். இரண்டாவது தகுதி சுற்று போட்டியில், ரஷீத் கான் அதிரடியாக பேட்டிங் செய்து மிரட்டினார். அதனால் மிடில் ஆர்டர் சொதப்பும் பட்சத்தில் ஹைதராபாத் அணி ரஷீத் கானை சார்ந்திருக்கும்.

வெல்லப்போவது யார்?

இந்த சீசனில் சென்னை அணியின் பந்து வீச்சு பெரிய அளவில் இல்லாவிட்டாலும், பேட்டிங்கில் அசத்தி வருகிறது. அம்பத்தி ராயுடு (586 ரன்), கேப்டன் டோனி (455 ரன்), வாட்சன் (438 ரன்), ரெய்னா (413 ரன்) உள்ளிட்டோர் நல்ல பார்மில் உள்ளனர். முந்தைய ஆட்டத்தில் பாப் டு பிளிஸ்சிஸ் அரைசதம் விளாசி தோல்வியின் விளிம்பில் இருந்து சென்னை அணியை காப்பாற்றினார். சென்னை அணியை பொறுத்தவரை குறிப்பிட்ட வீரரை நம்பி இருக்கவில்லை. இதுவரை 8 வீரர்கள் ஆட்டநாயகன் விருது பெற்றிருப்பதே அதற்கு சான்று. பந்து வீச்சில் நிகிடி, தீபக் சாஹர், ஜடேஜா, ‌ஷர்துல் தாகூர் ஓரளவு நம்பிக்கை தருகிறார்கள்.



ஏற்கனவே ஐதராபாத் அணியை லீக் சுற்றில் இரண்டு முறையும், இறுதிப்போட்டிக்கான தகுதி சுற்றிலும் புரட்டியெடுத்து இருப்பதால் சென்னை அணி மிகுந்த நம்பிக்கையுடன் களம் இறங்கும் என்பதில் சந்தேகமில்லை.
இரு அணிகளின் கேப்டன்களுமே நல்ல ஃபார்மில் உள்ளனர். சமபலம் வாய்ந்த, சிறந்த கேப்டன்களை கொண்ட இரு அணிகள் இறுதி போட்டியில் மோதுவதால் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

ரூ.20கோடி பரிசு:

வெற்றி பெறும் அணிக்கு சாம்பியன் கோப்பையுடன் ரூ.20 கோடி பரிசுத்தொகை வழங்கப்படும். தோல்வி அடைந்து 2–வது இடத்தை பிடிக்கும் அணிக்கு ரூ.12½ கோடி கிடைக்கும். இதே போல் ஆரஞ்சு நிற தொப்பியை தக்கவைக்கும் பேட்ஸ்மேனுக்கு ரூ.10 லட்சமும், ஊதா நிற தொப்பியை கைப்பற்றும் பவுலருக்கு ரூ.10 லட்சமும் கொடுக்கப்படும்.


உறுப்பினர் சேர்க்கைக்கு மய்யம் விசில்

மய்யம் விசில்:



மய்யம் விசில் ஒரு மந்திரக்கோல் அல்ல, இது ஓர் அபாயச் சங்கு’’ என்று சொல்லி,  தங்கள் பகுதியில் இருக்கும் பிரச்னைகள் குறித்து பொதுமக்கள் இதில் பதிவிட்டு புகார் செய்யலாம் என்பதுதான் இந்தச் செயலியின் சிறப்பம்சம். வெளியிடப்பட்ட அடுத்த நாளிலிருந்தே, இதன் மூலம் பெறப்பட்ட புகார்கள் குறித்தும், அவற்றின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் கமல் தொடர்ந்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுவருகிறார். மக்களின் புகார்களை அரசாங்கத்தின் செவிகளுக்கு கொண்டுசெல்லும் ஓர் ஊடகமாக விசில் செயலி.

பிளே ஸ்டோரில் இந்த ஆப்-ஐ டவுன்லோடு செய்துவிட்டு, பெயர், மொபைல் எண், மின்னஞ்சல் முகவரி ஆகிய தகவல்களை மட்டும் கொடுத்தால் போதும். உடனே கணக்கு தொடங்கப்பட்டதற்கு அடையாளமாக நம் மொபைலுக்கு OTP வரும். அது செயலிக்கான அக்கவுன்ட் மட்டுமல்ல; மக்கள் நீதி மய்யத்துக்கான உறுப்பினர் எண்ணும்கூட. பின்னர் பாஸ்வேர்டு செட் செய்துவிட்டு உள்ளே நுழைந்தால், கமலின் வீடியோ உங்களை வரவேற்கும். அதனைப் பார்த்து முடித்துவிட்டால் போதும்; மய்யம் விசில் ரெடி. சாதாரணக் குடிமகன் அல்லது சாம்பியன் என இரண்டுவிதமாக இதில் பதிவுசெய்துகொள்ள முடியும். குடிமகனாகப் பதிவு செய்தால், செயலியில் புகார்களைப் பதிவு செய்யவும், பார்க்கவும் முடியும். சாம்பியனாகப் பதிவு செய்தால், பிறர் புகார்களைப் பார்த்து அது சரியானது என உறுதிசெய்யவும் முடியும்.

https://www.maiamwhistle.org/

மக்கள் தரும் புகார்களைக் கையாள்வதற்காக மண்டலவாரியாக நிர்வாகிகள் நியமிக்கப் பட்டிருக்கின்றனர். உறுதிசெய்யப்பட்ட புகார்கள் அனைத்தும் அவர்களிடம் போகும். அவர்கள் அவற்றை அரசிடம் கொண்டுசெல்வார்கள். அவற்றின்மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என்பது செயலியில் அப்டேட் செய்யப்படும். பொதுவாகப் பார்த்தால், மக்கள் புகார்களைப் பதிவு செய்வதற்காகவும், தங்களைச் சுற்றியிருக்கும் பிரச்னைகளை அறிந்துகொள்வதற்காகவும் ஒரு நல்ல செயலி என்றுதான் தோன்றும்.  

மய்யம் விசிலில் பதிவிட்டால் மட்டும் எப்படி அதன்மீது நடவடிக்கை எடுக்கப்படும்? 




‘‘இதுவரை தங்களைச் சுற்றி நடக்கும் குற்றங்களையும் சமூகக் கேடுகளையும் கைகட்டி வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தவர்களை,முதல்முறையாக எங்கள் செயலி மூலம் குரல்கொடுக்க வைத்திருக்கிறோம். இதுதான் எங்களின் வெற்றி. தினமும் சராசரியாக ஆயிரம் புகார்களுக்கு மேல் வருகின்றன. புகார்களைக் கையாள் வதற்காகவும், அவை குறித்து ஆலோசனை வழங்குவதற்காகவும் ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் மற்றும் ஐ.பி.எஸ் அதிகாரிகள், சட்ட வல்லுநர்கள், கட்சி நிர்வாகிகள் உள்பட அனைவரையும் கொண்ட குழு இங்கே செயல்பட்டு வருகிறது. புகார்களை அரசிடம் எப்படிக் கொண்டுசெல்ல வேண்டுமோ, அப்படி கொண்டுசென்று தீர்வு தேடுவோம். அதுதான் எங்களின் பணி.

இப்போதைக்கு ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ஓர் அட்மின் இருக்கிறார். அவர்தான் அந்த மாவட்டத்தில் வரும் புகார்களைக் கவனித்துக்கொள்கிறார். எதிர்காலத்தில், 234 தொகுதிகளிலும் மய்யம் விசிலுக்கான அட்மின்கள் உருவாக வேண்டும் என்பதே எங்கள் விருப்பம். கிராமங்களிலிருந்துதான் அதிகளவில் புகார்கள் வருகின்றன. இளைஞர்கள் அதிகளவில் புகார்களைப் பதிவு செய்கின்றனர். குடிநீர் தட்டுப்பாடு, ரோடு சரியில்லை என்பது போன்ற புகார்களே அதிகம் வருகின்றன. இவற்றை நிர்வாகிகளே அதிகாரிகளிடம் கொண்டுபோகிறார்கள். பெரிய அளவிலான ஊழல் புகார்கள் என்றால் கமலே களத்தில் இறங்குவார். புகார் கொடுப்பவரின் அடையாளங்கள் உறுதியாகப் பாதுகாக்கப்படும்” என்றவர்கள் செயலியின் மீதான விமர்சனங்க ளுக்கும் விடையளித்தனர்.



வருங்காலத்தில் இதன் பயன்பாடு அதிகரிக்கும். அப்போது எல்லோரும் புகார் அளிக்கும்படி இதை மாற்றிவிடுவோம். இதில் புகார் அளிக்கும் வசதி மட்டுமல்ல; உங்கள் பகுதியில் இருக்கும் மொத்தப் பிரச்னைகளையும் பார்க்கும் வசதியும் இருக்கிறது. தன் தொகுதியின் நிலை குறித்து எந்தவொரு குடிமகனும் இதன்மூலம் எளிதில் அறிந்துகொள்ளலாம்.


மக்கள் தொடர்ந்து பதிவு செய்யும் புகார்கள் மூலமாக சமூகப் பிரச்னைகளை நாங்கள் புரிந்து கொள்கிறோம். அவற்றை அரசிடம் கொண்டுசெல்லும்போது ஏற்படும் பிரச்னைகளைப் பார்த்து, நிர்வாகக் குளறுபடிகளை அறிந்துகொள்ள முடிகிறது. எங்களைப் போன்ற புதிய கட்சி ஒன்றுக்கு இந்தப் பிரச்னைகள் மிகச்சிறந்த பாடம். எங்கள் கட்சி அதிகாரத்துக்கு வரும்போது, இந்தப் பிரச்னைகள் அனைத்துக்கும் உடனடித் தீர்வு கிடைக்கும். 


மய்யத்தில் சேர்ந்தால் நேர்மையாக இருக்க வேண்டும்



 
மக்கள் நீதி மய்யத்தில் சேர்ந்தால் நேர்மையாக இருக்க வேண்டும்


தென் தமிழகம் சென்றுள்ள கமல்ஹாசன் இன்று விருதுநகர் மாவட்டத்தில் உள்ள இராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி, விருதுநகர் நகர்ப்பகுதிகள் உள்ளிட்ட இடங்களில் பொதுமக்களையும், தொண்டர்களையும் சந்தித்துப் பேசினார். பின்னர் காமராஜர் இல்லத்துக்குச் சென்று மாலை அணிவித்து மரியாதை செய்தபின் விருதுநகரில் பொதுக்கூட்டத்தில் பேசினார். மாணவர்கள் தொடர்ந்து சாதனைப் புரிவது மகிழ்ச்சியாக உள்ளது. காமராஜர் பெருமை மீண்டும், மீண்டும் பலமாகிறது. காமராஜர் காலத்தில் மாணவர்களாக இருந்த நபர்கள் தற்போது ஆசிரியர்களாக மாறி பல்வேறு மாணவர்களை உருவாக்கியுள்ளனர். 












மக்கள் நீதி மய்யமும் செயல்பட வேண்டும் எனத் தொண்டர்களிடம் கட்சியின் மூத்த தொண்டர் என்ற முறையில் கேட்டுக்கொள்கிறேன். உங்களிடம் ஆசி பெறதான் வந்துள்ளேன். உங்களைப் பார்க்கும்போது எனக்கு வேகம் பிறக்கிறது. மக்கள் நீதி மய்யத்தில் பெண்களும், இளைஞர்களும் அதிக அளவு உறுப்பினர்களாகச் சேர்ந்துகொண்டிருக்கின்றனர். தற்போது மழை பெய்து இருந்தாலும் தொண்டர்களுக்காக மழையில் நனைந்துகொண்டே பேசுவதைப் பற்றி கவலைப்பட்டிருக்கமாட்டேன். பிற கட்சியில் இருந்து நமது கட்சியில் சேரும் நபர்களுக்கு நாம் உறுதி மொழி கொடுக்க முடியாது. அவர்கள்தான், நேர்மையாக இருப்போம் என்று உறுதி கொடுக்க வேண்டும். மக்கள் நீதி மய்யத்தில் இருப்பவர்கள் ஒரு நேர்மையான நிர்வாகியாகவும், தொண்டனாகவும் தான் இருக்க வேண்டும்" என்றார்.

மய்யம் விசில் செயலியில் குவிந்திருக்கும் புகார்கள்:


மய்யம் விசில் செயலியில் குவிந்திருக்கும் புகார்கள்:

மய்யம் விசில் செயலியில் துப்பாக்கிச்சூடு தொடர்பாக குவிந்திருக்கும் புகார்கள்
kamal
மய்யம் விசில் செயலியில் வந்திருக்கும் புகார்களாகத் தெரிவிக்கப்பட்டுள்ளவையார் இந்தத் துப்பாக்கிச்சூட்டுக்கு அனுமதி அளித்ததுதுப்பாக்கிச்சூட்டுக்கு அனுமதிக்கப்பட்ட இடங்களின் தக்க விவரங்கள் என்னென்னதுப்பாக்கிச்சூட்டுக்குப் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள் மற்றும் குண்டுகளின் விவரங்கள் ஏன் இன்னும் வெளியிடப்படவில்லை?  இதுபோன்று பல சந்தேகங்கள் நிறைந்த கேள்விகளை முன் வைத்து அதற்கு அரசு பதிலளிக்க முடியுமா என கமல்ஹாசன் கேட்டுள்ளார்.






மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் கடந்த சில தினங்களுக்கு முன்பு மய்யம் விசில் என்ற செயலியை அறிமுகப்படுத்தினார். அதில் மக்கள் அவர்கள் பகுதியில் இருக்கும் குறைகள் மற்றும் புகார்களைத் தெரிவித்தால் அதற்கு மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், கடந்த நான்கு நாள்களாக தூத்துக்குடியில் நடந்து வந்த கலவரம் மற்றும் காவல்துறையினரின் துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் குறித்து மய்யம் விசில் செயலிக்கு அதிக புகார்கள், கேள்விகள் வந்துள்ளதாகவும் அதற்கு அரசு பதிலளிக்க முடியுமா என்று கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அந்தப் பதிவில், ‘தூத்துக்குடியில் காவல் துறையின் இந்த நடவடிக்கைக்குக் காரணம் அரசாங்கம் மற்றும் காவல் துறையினரின் திறமையின்மையா அல்லது திட்டமிட்டு நடத்தப்பட்ட வன்முறையா என்ற கேள்வி எழுவதைத் தவிர்க்க முடியவில்லை. போராட்டக்காரர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நுழையவோ, அங்கிருக்கும் பொருள்களை சேதப்படுத்தவோ, முயலவில்லை என்றே நமக்குக் கிடைத்த அனைத்துத் தகவல்களும் உறுதி செய்கின்றன.