அப்பல்லோ மருத்துவமனையில்:
கடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பர் 22-ந்தேதி ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.அவர் கடைசி யாக பேசிய, 'ஆடியோ' பதிவு, விசாரணை கமிஷனில், நேற்று வெளியிடப்பட்டது.
அவ்வப்போது அவருக்கு மூச்சுத்திணறலும் ஏற்பட்டு வந்தது. மூச்சு விடும்போது ‘விசில்’ போன்ற சத்தமும் வந்துள்ளது. இதை ஜெயலலிதா தனக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் நரசிம்மனிடம் தெரிவித்துள்ளார்.அப்படியென்றால் விசில் போன்ற சத்தம் வரும்போது அதை செல்போனில் பதிவு செய்து வைத்துக்கொள்ளுங்கள், நான் சிகிச்சை அளிக்க வரும்போது அதை பார்த்து விட்டு உரிய சிகிச்சை அளிக்கிறேன் என்று கூறி உள்ளார்.மூச்சுவிடும்போது வெளிவரும் சத்தத்தை செல்போனில் பதிவு செய்துள்ளார். ஜெயலலிதா இருமியபடியே மெல்லிய குரலில் மருத்துவருடன் சில நொடிகள் பேசும் அவரது பேச்சு 2 ஆடியோவாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
அந்த ஆடியோவில் பதிவாகி உள்ள உரையாடல் வருமாறு:-
ஜெயலலிதா(தனக்கு அருகில் நிற்கும் மருத்துவரை பார்த்து):- என்ன பண்றீங்க...
மருத்துவர்:- ஒன்னுமில்ல மேடம். ரத்த சர்க்கரை அளவை பதிவு செய்கிறேன்.
ஜெயலலிதா:- கேட்குதா...(விசில் போன்ற சத்தம்).
மருத்துவர்:- இப்ப பெருசா இல்ல மேடம்...
ஜெயலலிதா (இருமிக்கொண்டே):- அப்ப இருந்தபோது கூப்பிட்டேன். அப்ப அதை எடுக்க முடியலன்னீங்க.
மருத்துவர்:- அப்ளிகேசனை டவுன் லோடு பண்ணிக்கிட்டு...(விசில் போன்ற சத்தத்தை பதிவு செய்வதற்கு ஆடியோ அப்ளிகேசனை மருத்துவர் டவுன்லோடு செய்து கொண்டிருந்ததாக கூற வருகிறார்)
ஜெயலலிதா:- எல்லாம் ஒன்னு கிடக்க ஒன்னு...
மருத்துவர்:- சரி...சரி...
ஜெயலலிதா:- இப்ப எடுக்க முடியலனா விடுங்க(ஜெயலலிதா கடுமையாக இருமுகிறார்)
மருத்துவர்:- சரி
ஜெயலலிதா(இருமிக்கொண்டே):-(பீப் பீப் என்ற சத்தம் தொடர்ந்து கேட்கிறது)நல்லா வருது வீய் வீய்னு உள்ள... தியேட்டரில் முதல் வரிசையில் விசில் அடிக்கிற மாதிரி இருக்கு. அடே... அம்மா...
செவிலியர்:- ஒன் பார்ட்டி(140) இருக்கு (சர்க்கரை அளவு)... ஹையா இருக்கு...
ஜெயலலிதா:- பை
செவிலியர்:- எய்ட்டி(80)
ஜெயலலிதா:- இட்ஸ் ஓகே பார் மீ. நார்மல்(இது எனக்கு சரியான அளவு தான்).
அதேவேளையில், இந்த ஆடியோவில் பதிவாகி உள்ள குரல் ஜெயலலிதாவின் குரல் தானா? என்பதை உரிய பரிசோதனை மூலம் கண்டறியவும் ஆணையம் முடிவு செய்துள்ளது.

No comments:
Post a Comment