மக்கள் நீதி மய்யத்தில் சேர்ந்தால் நேர்மையாக இருக்க வேண்டும்
தென் தமிழகம் சென்றுள்ள கமல்ஹாசன் இன்று விருதுநகர் மாவட்டத்தில் உள்ள இராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி, விருதுநகர் நகர்ப்பகுதிகள் உள்ளிட்ட இடங்களில் பொதுமக்களையும், தொண்டர்களையும் சந்தித்துப் பேசினார். பின்னர் காமராஜர் இல்லத்துக்குச் சென்று மாலை அணிவித்து மரியாதை செய்தபின் விருதுநகரில் பொதுக்கூட்டத்தில் பேசினார். மாணவர்கள் தொடர்ந்து சாதனைப் புரிவது மகிழ்ச்சியாக உள்ளது. காமராஜர் பெருமை மீண்டும், மீண்டும் பலமாகிறது. காமராஜர் காலத்தில் மாணவர்களாக இருந்த நபர்கள் தற்போது ஆசிரியர்களாக மாறி பல்வேறு மாணவர்களை உருவாக்கியுள்ளனர்.
மக்கள் நீதி மய்யமும் செயல்பட வேண்டும் எனத் தொண்டர்களிடம் கட்சியின் மூத்த தொண்டர் என்ற முறையில் கேட்டுக்கொள்கிறேன். உங்களிடம் ஆசி பெறதான் வந்துள்ளேன். உங்களைப் பார்க்கும்போது எனக்கு வேகம் பிறக்கிறது. மக்கள் நீதி மய்யத்தில் பெண்களும், இளைஞர்களும் அதிக அளவு உறுப்பினர்களாகச் சேர்ந்துகொண்டிருக்கின்றனர். தற்போது மழை பெய்து இருந்தாலும் தொண்டர்களுக்காக மழையில் நனைந்துகொண்டே பேசுவதைப் பற்றி கவலைப்பட்டிருக்கமாட்டேன். பிற கட்சியில் இருந்து நமது கட்சியில் சேரும் நபர்களுக்கு நாம் உறுதி மொழி கொடுக்க முடியாது. அவர்கள்தான், நேர்மையாக இருப்போம் என்று உறுதி கொடுக்க வேண்டும். மக்கள் நீதி மய்யத்தில் இருப்பவர்கள் ஒரு நேர்மையான நிர்வாகியாகவும், தொண்டனாகவும் தான் இருக்க வேண்டும்" என்றார்.


No comments:
Post a Comment