ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டத்தின் போது ஏற்பட்ட வன்முறையில் 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தையடுத்து 5 நாட்களுக்குப் பிறகு தூத்துக்குடியில் போடப்பட்டிருந்த 144 தடை உத்தரவு நீக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாநகர பகுதியில் ஆங்காங்கே பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்களும் நடந்தன. இதன் காரணமாக தூத்துக்குடியில் கடந்த 4 நாட்களாக பஸ்கள் இயங்காததாலும், கடைகள் திறக்கப்படாததாலும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது..
இந்த நிலையில் 5-வது நாளான நேற்று காலை தூத்துக்குடியில் இருந்து நெல்லை, திருச்செந்தூர், மதுரை, கோவை உள்ளிட்ட வெளியூர்களுக்கு பஸ் போக்குவரத்து தொடங்கியது. நகர்ப்புறத்தில் ஒரு சில இடங்களை தவிர மற்ற பகுதிகளுக்கு பஸ்கள் இயக்கப்பட்டன. இதனால் பஸ்களில் பயணிகளின் கூட்டம் சற்று அதிகமாகவே காணப்பட்டது.
நேற்று (நேற்று முன்தினம்) பஸ் எரிப்பு சம்பவம் நடந்துள்ளது. இதுபோன்ற செயல்களில் யாரும் ஈடுபடக்கூடாது. பஸ்களுக்கு அனைத்து பாதுகாப்பும் மேற்கொள்ளப்படும். தவறான எண்ணத்துடன் யாரேனும் பஸ்களை நெருங்கி வந்தால், அதனை தடுப்பதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.
தூத்துக்குடியில் இணையதள சேவை வழங்குவது தொடர்பாக ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. விரைவில் இணையதள சேவை கிடைக்கும். தூத்துக்குடியில் நடந்த கலவரத்தில் இறந்த 7 பேரின் உடல்கள் மாஜிஸ்திரேட்டு முன்னிலையில் பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது. காயம் அடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் இருந்து டாக்டர்கள் வரவழைக்கப்பட்டு, சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
இந்த சம்பவத்தில் இதுவரை பாதிக்கப்பட்ட 52 பேருக்கு ரூ.1 கோடியே 4 லட்சம் நிவாரண உதவி வழங்கப்பட்டு உள்ளது. மீதம் உள்ளவர்களுக்கு விரைவில் வழங்கப்படும். கலவரத்தில் காணாமல் போனவர்கள் குறித்து மாவட்ட கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டை அணுகி புகார் தெரிவிக்கலாம். தூத்துக்குடியில் 100 சதவீதம் அமைதி திரும்பிய உடன் படிப்படியாக போலீசாரை திரும்ப பெற நடவடிக்கை எடுக்கப்படும்.


No comments:
Post a Comment