Saturday, May 26, 2018

தூத்துக்குடி செல்கிறார் துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம்

தூத்துக்குடி:

துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் நாளை தூத்துக்குடி செல்லவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.அங்கு ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு பாதிக்கப்பட்டோரை அவர் சந்திக்கிறார்


தொடர்ந்து 100வது நாளன்று பெரிய அளவில் போராட்டம் நடத்தப்பட்டது. இதில் ஆட்சியர் அலுவலகம் நோக்கி நடந்த பேரணியானது வன்முறையாக வெடித்தது. இந்த சம்பவத்தில் கலகக்காரர்களை அடக்க போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் 13 பேர் பலியாகினர். பலர் காயமடைந்தனர். 150க்கும் மேற்பட்டோர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

இன்று காலை 8 மணியுடன் 144 தடை உத்தரவு வாபஸ் பெறப்பட்டது. இந்நிலையில் ஆளுங்கட்சியின் முதல் நபராக அமைச்சர் கடம்பூர் ராஜூ, தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.




இந்நிலையில் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் நாளை தூத்துக்குடி செல்கிறார். அங்கு ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தின்போது, பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்பின்னர் அவர் தூத்துக்குடிக்கு சென்று, ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு பாதிக்கப்பட்டோரை சந்திக்க இருக்கிறார்

No comments:

Post a Comment