Saturday, May 26, 2018

தூத்துக்குடியில் நீங்கியது விதிக்கப்பட்டிருந்த 144 தடை

தூத்துக்குடி:


தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி 100வது நாளன்று பெரிய அளவில் போராட்டம் நடத்தப்பட்டது. இந்த சம்பவத்தில் ஆட்சியர் அலுவலகம் நோக்கி நடந்த பேரணியின்பொழுது வழியில் வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. போராட்டத்தில் வன்முறையில் ஈடுபட்டவர்களை கலைக்க போலீசார் தடியடி நடத்தினர். கண்ணீர் புகைக்குண்டுகள் வீசினர்.




அங்கு போராட்டம் வன்முறையாக வெடித்தது. இந்த சம்பவத்தில் கலகக்காரர்களை அடக்க போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் 13 பேர் பலியாகினர். பலர் காயமடைந்தனர். 150க்கும் மேற்பட்டோர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.






இந்த சம்பவம் நாடெங்கும் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அசம்பாவிதங்களை தடுக்க மாவட்ட நிர்வாகம் கடந்த 21ம் தேதி இரவு 10 மணி முதல் 23ம் தேதி காலை 8 மணி வரை 144 தடை விதித்தது. பதற்றம் நிலவியதால் 144 தடை நீட்டிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தூத்துக்குடியில் 95 சதவீதம் இயல்பு நிலை திரும்பியுள்ளதால், 144 தடை உத்தரவு வாபஸ் பெறப்பட்டதாக ஆட்சியர் சந்தீப் நந்தூரி இன்று காலை அறிவித்துள்ளார்..தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட அனைத்து சட்டப்பூர்வ நடவடிக்கைகளை அரசு உறுதியாக எடுக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.






No comments:

Post a Comment